புகலிடம்

ஆஸ்திரேலியாவிக்கு நான் வந்தேன் புகலிடம் கோர விரும்புகிறேன். UNHCR எனக்கு உதவ முடியுமா?

அகதிகளுக்கான நிலை மற்றும் அதன் 1967 உடன்படிக்கை தொடர்பான 1951 உடன்படிக்கைக்கு ஒரு ஒப்பந்த அரசு என்ற வகையில், ஆஸ்திரேலிய அரசாங்கம் தஞ்சம் புகலிடம் கோருவோர் அகதிகள் என்பதை தீர்மானிக்க நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த நடைமுறைகள் ஆஸ்திரேலிய சட்டத்திற்கு இணங்க உள்நாட்டலுவல்கள் திணைக்களத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்த காரணத்திற்காக, UNHCR புகலிடம் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள உதவுவதில்லை. உங்கள் உரிமைகோரலை தயாரிப்பதில் வழக்கறிஞர் அல்லது பதிவு இடம்பெயர்தல் முகவரை ஆலோசிக்கும்படி UNHCR பரிந்துரைக்கிறது. பதிவு இடம்பெயர்வு முகவர்கள் பட்டியல் இந்த இணையதளத்தில் கிடைக்கும்: www.mara.gov.au

 

நான் ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளேன், ஆனால் என் விண்ணப்பம் வெற்றிகரமாக இல்லை. UNHCR எனக்கு உதவ முடியுமா?

UNHCR ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோருதலைத் தீர்மானிப்பதில் ஈடுபடவில்லை, தனிப்பட்ட விண்ணப்பங்களை மறு ஆய்வு செய்வதுதில்லை.

மேல்முறையீட்டு செயல்முறையின்பேரில் உங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு வழக்கறிஞரின் அல்லது குடிவரவு முகவரின் உதவியையும் நாட வேண்டும் என UNHCR உங்களை பரிந்துரைக்கிறது. பதிவுசெய்யப்பட்ட குடிவரவு முகவர்களின் பட்டியல் ஆஸ்திரேலிய இடம்பெயர்வு முகவர்கள் பதிவு அதிகார அமைப்பு வழியே பெற முடியும்.

 

நான் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே தற்போது இருக்கிறேன் ஆனால் தஞ்சம் கோர விரும்புகிறேன். UNHCR எனக்கு உதவ முடியுமா?

நீங்கள் ஆஸ்திரேலியாவிற்கு வெளியில் இருக்கிறீர்கள் மற்றும் புகலிடம் கோர விரும்பினால், நீங்கள் உள்ளூரில் இருக்கும் UNHCR அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

உலகெங்கிலும் உள்ள UNHCR அலுவலகங்களுக்கான தொடர்பு விவரங்கள் UNHCR இணையதளத்தில் காணலாம்.