மீள்குடியமர்தல்

நான் நியூசிலாந்தில் அகதி அல்லது தஞ்சம் கோருபவர். யூ.என்.என்.எச்.சி.ஆர் என்னை மற்றொரு நாட்டிற்கு மீள்குடியேற்றுமா?

UNHCR ஆணையத்தால் அகதிகளை மீள்குடியேற்றவோ அல்லது இடம்பெயரச் செய்யவோ, அல்லது மறுக்கப்பட்ட புகலிடம் கோருவோரை நியூசிலாந்தில் இருந்து வேறு எந்த நாட்டிற்கும் அனுப்ப முடியாது.

நான் ஒரு அகதியாக இருக்கிறேன் மற்றும் நியூசிலாந்திற்கு மீள் குடியேற விரும்புகிறேன். UNHCR எனக்கு உதவ முடியுமா?

நீங்கள் நியூசிலாந்திற்கு வெளியே வாழும் அகதிகயாக இருந்தால், உங்கள் மீள்குடியேற்றத் தெரிவுகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் பதிவுசெய்த UNHCR அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.உலகெங்கிலும் உள்ள UNHCR அலுவலகங்களுக்கான தொடர்பு விவரங்கள் UNHCR இணையதளத்தில் காணலாம்: www.unhcr.org/en-au/where-we-work

ஒவ்வொரு வருடமும் கிடைக்கக்கூடிய சிறிய மீள்குடியேற்ற இடங்களின் ஒதுக்கீடு காரணமாக, மீள்குடியேற்றம் என்பது ஒரு சிறிய எண்ணிக்கையிலான அகதிகளுக்கு மட்டுமே கிடைக்கும் தீர்வாகும். அகதி அந்தஸ்தை அங்கீகரிப்பது நீங்கள் ள்குடியமர்வுக்கு தகுதிவாய்ந்தவர் என்பதை அர்த்தப்படுத்தவில்லை.
நீங்கள் நியூசிலாந்தில் குடியேற உதவ கிடைக்கும் மற்ற இடம்பெயர்வு விருப்பங்கள் இருக்கலாம்.

ஒரு வழக்கறிஞரின் அல்லது குடிவரவு முகவரின் உதவியையும் நாட வேண்டும் என UNHCR உங்களை பரிந்துரைக்கிறது. பதிவுசெய்யப்பட்ட குடிவரவு முகவர்களின் பட்டியல் குடியேற்ற ஆலோசகர்கள் ஆணையம் வழியே பெற முடியும்: www.iaa.govt.nz

நியூசிலாந்தில் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்கள், அவர்களுடனான நியூசிலாந்தில் மீண்டும் குடும்ப மறுஒழுங்கு சேர விரும்புகிறேன். UNHCR எனக்கு உதவ முடியுமா?

கான்பெர்ராவில் உள்ள UNHCR பிராந்திய பிரதிநிதித்துவம் நியூசிலாந்திற்கு மீள்குடியேற்ற உதவ முடியாது.

நீங்கள் நியூசிலாந்திற்கு வெளியே வாழும் அகதிகயாக இருந்தால், உங்கள் மீள்குடியேற்றத் தெரிவுகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் பதிவுசெய்த UNHCR அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். உலகெங்கிலும் உள்ள UNHCR அலுவலகங்களுக்கான தொடர்பு விவரங்கள் UNHCR இணையதளத்தில் காணலாம்: www.unhcr.org/en-au/where-we-work

உங்கள்ளுக்கு நியூசிலாந்தில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால், உங்களுக்கு குடும்ப மறுஒழுங்கு அல்லது ஸ்பான்ஸர் விசா வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். நியூசிலாந்தில் உள்ள உங்கள் குடும்ப உறுப்பினர், குடும்ப மறுஒழுங்கு தொடர்பாக ஒரு வழக்கறிஞரின் அல்லது குடிவரவு முகவரின் உதவியையும் நாட வேண்டும்.

பதிவுசெய்யப்பட்ட குடிவரவு முகவர்களின் பட்டியல் குடியேற்ற ஆலோசகர்கள் ஆணையம் வழியே பெற முடியும்: www.iaa.govt.nz