புகலிடம்

நியூஸிலாந்துக்கு நான் வந்தேன் புகலிடம் கோர விரும்புகிறேன். UNHCR எனக்கு உதவ முடியுமா?

புகலிடம் கோருபவர்கள் அகதிகளாக உள்ளார்களா? என்பதை நிர்ணயிப்பதற்கு நியூசிலாந்து அரசாங்கம் நடைமுறைகளை உருவாக்கியுள்ளது.

இந்த காரணத்திற்காக, UNHCR நியூசிலாந்தில் புகலிடம் கோருதலைத் தீர்மானிப்பதில் உதவ முடியாது. உங்கள் கூற்றைத் தயாரிப்பதில் வழக்கறிஞர் அல்லது குடிவரவு ஆலோசகரின் ஆலோசனையை நீங்கள் கேட்கும்படி UNHCR பரிந்துரைக்கிறது. குடியேற்ற ஆலோசகர்களின்  பட்டியல் இந்த இணையதளத்தில் கிடைக்கும்: https://www.iaa.govt.nz

 

நான் நியூசிலாந்தில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளேன், ஆனால் என் விண்ணப்பம் வெற்றிகரமாக இல்லை. UNHCR எனக்கு உதவ முடியுமா?

UNHCR நியூசிலாந்தில் (ஆஸ்திரேலியாவில்) தஞ்சம் கோருதலைத் தீர்மானிப்பதில் ஈடுபடவில்லை, தனிப்பட்ட விண்ணப்பங்களை மறு ஆய்வு செய்வதுதில்லை.

மேல்முறையீட்டு செயல்முறையின்பேரில் உங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு வழக்கறிஞரின் அல்லது குடிவரவு முகவரின் உதவியையும் நாட வேண்டும் என UNHCR உங்களை பரிந்துரைக்கிறது.

பதிவுசெய்யப்பட்ட குடிவரவு முகவர்களின் பட்டியல் குடியேற்ற ஆலோசகர்கள் ஆணையம் வழியே பெற முடியும்.